என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ
.
நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு
அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா
அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு
நான் என்ன அறியா பெண்ணா
பாடம் இருட்டில் கூறும் பாஷை உதட்டின் ஓசை
பாடம் இருட்டில் கூறும் பாஷை உதட்டின் ஓசை
நான்கு விழியல்லவோ…பேசும் மொழியல்லவோ
.
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ
தாகம் எடுக்கின்றதோ
.
சங்கமத்தில் நானும் செய்த பிழை யாவும்
மன்னிக்கின்ற மனம் வேண்டுமே
குங்குமத்தில் வாழும் கோலமகள் என்று
பாராட்டும் குணம் வேண்டுமே
ஜானகியை ராமன் சோதனைகள் செய்தான்
அந்த உள்ளம் எனக்கில்லையே
நான் அறிந்த சீதை பாவம் ஒரு பேதை
பூப்போன்ற சிறு பிள்ளையே
பாடல் பிறக்கும் போது ஊடல் நமக்குள் எது
பாடல் பிறக்கும் போது ஊடல் நமக்குள் எது
வாழும் உறவல்லவோ…ஒன்று உயிரல்லவோ
.
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றதோ
அச்சம் தடுக்கின்றதோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக