பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : ஓஹோ….ஊ…..ஏ….ஆ…..
பெண் : ஆஹா ஆ…..ஹா….
ஏஹேஹேஹே ஆஹாஹா
பெண் : ஓஹோ….ஓஹோஹோ ஹோ
ஆண் : ஏஹே ஏஹே ஏஹே ஏஹே
இனியவளே என்று பாடி வந்தேன்
பெண் : ம்ம்ம்…..ம்ம்….ஆஹா ஹா ஹா ஹா…..
ஆண் :
இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள்தான் என்று ஆகி விட்டேன் ..
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
பெண் : ஆஹா ஹா ஹா ஹா…..
இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்
ஏழிசையில் மோகனமாய் இனிமை தந்தவன்
ஆண் : ஓராயிரம் காலம்
இந்த உள்ளம் ஒன்றாக
பெண் : ஒன்றானவர் வாழ்வே
இன்ப வெள்ளம் என்றாக
ஆண் : துணை தேடி வரும் போது
கண்ணில் என்ன நாணமோ
பெண் : குணம் நாட்டில் உருவான
பெண்மை என்ன கூறுமோ
ஆண் : திருநாள் வரும் அதோ பார்
பெண் : தருவார் சுகம் இதோ பார்
ஆண் : திருநாள் வரும் அதோ பார்
பெண் : தருவார் சுகம் இதோ பார்
ஆண் : பொன் மாலையில்
பெண் : பூமாலையை
ஆண் : நெஞ்சில் சூடவோ
பெண் : சூடவோ
ஆண் : சூடவோ
பெண் : இனியவனே என்று பாடி வந்தேன்
இனி அவன்தான் என்று ஆகிவிட்டேன்
ஆண் : தாலாட்டிடும் நெஞ்சம்
தன்னைத் தங்கம் என்றானோ
பெண் : பாராட்டிடும் இன்பம்
தன்னை மங்கை கண்டாளோ
ஆண் : நினைத்தாலும் சுகம் தானே
இந்த நெஞ்சின் காவியம்
பெண் : கொடுத்தாலும் நலம் தானே
என்னைக் கொஞ்சும் ஓவியம்
ஆண் : இதழால் உடல் அளந்தாள்
பெண் : இவளோ தன்னை மறந்தாள்
ஆண் : இதழால் உடல் அளந்தாள்
பெண் : இவளோ தன்னை மறந்தாள்
ஆண் : ஏனென்பதை
பெண் : யார் சொல்வது
ஆண் : இன்னும் மௌனமேன்
பெண் : மௌனமேன்
ஆண் : மௌனமேன்
ஆண் : இனியவளே என்று பாடி வந்தேன்
இனியவள்தான் என்று ஆகி விட்டேன் ..
இன்பமெல்லாம் ஏந்தி வரும் இளமை கொண்டவள்
பெண் : ஆ….லாலாலலா ஓஹோஹஓஹோ
ஓஹ்ஹோ ஓஹ்ஹோ….ஓஹ்ஹோ ஓஹ்ஹோ…..