மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2019

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து !

நான் ஒரு சிந்து !

காவடிச்சிந்து !

ராகம் புரியவில்ல!

உள்ள சோகம் தெரியவில்ல !

தந்தை இருந்தும் தாயும் இருந்தும் !

சொந்தம் எதுவும் இல்ல!

அத சொல்ல தெரியவில்ல!

  நான் ஒரு சிந்து காவடிச்சிந்து

 ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

 தந்தை இருந்தும் தாயும் இருந்தும்

சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து

 ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

  இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ

 நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ

 இல்லாத உறவுக்கு என்னென்ன பேரோ

 நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ

விதியோடு நான் ஆடும் வெளையாட்ட பாரு

 வெளையாத காட்டுக்கு வெத போட்டதாரு

பாடு படிச்சா சங்கதி உண்டு

 என் பாடுக்குள்ளையும் சங்கதி உண்டு

கண்டு பிடி

பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை

அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை

பெண் கன்று பசு தேடி பார்கின்ற வேலை

அம்மான்னு சொல்லவும் அதிகாரம் இல்லை

என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே

கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே

தலை எழுத்தென்ன என் மொதல் எழுத்தென்ன

தலை எழுத்தென்ன மொதல் எழுத்தென்ன சொல்லுங்கள்ளேன்

 நான் ஒரு சிந்து காவடிச்சிந்து

 ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல

தந்தை இருந்தும் தாயும் இருந்தும்

சொந்தம் எதுவும் இல்ல அத சொல்ல தெரியவில்ல

நான் ஒரு சிந்து காவடிச்சிந்து

ராகம் புரியவில்ல உள்ள சோகம் தெரியவில்ல!

இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு !


இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு!

அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு !

இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை !

இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை!

இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை!

இல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை!

கனி ரசமாம் மது அருந்தி களிப்பதல்ல இன்பம்!

கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்!

இணையில்லா மனையாளின் வாய் மொழியே இன்பம்!

அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்!

மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்!

வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்!

மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்!

உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்!

எண்ணம் - மருதகாசி

குரல் - சீர்காழி கோவிந்தராஜன்

இசை - கே வி மகாதேவன்

திரைச்சித்திரம் - மானமுள்ள மறுதாரம்