மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 7 நவம்பர், 2017

உன்னை நான் பார்த்தது ! வெண்ணிலா வேளையில் !

உன்னை நான் பார்த்தது
 வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
 உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான் (உன்னை..)

 நான் உனக்காகவே ஆடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன் (உன்னை..)
 அன்று ஒரு பாதி முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி எதிர்ப்பார்த்து நின்றேன்
கை வலையோசை கடல் பொங்கும்
 அலையோசையோ என செவியார
நான் கேட்க வரவில்லையோ

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
 உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்

 கம்பன் மகனாக நான் மாற வேண்டும்
 கன்னி தமிழால் உன் எழில் கூற வேண்டும்
 என் மகாராணி மலர்மேனி செம்மாங்கனி
என மடி மீது குடியேறி முத்தாட வா

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
எங்கு தொட்டாலும் இனிக்கின்ற செந்தேன்
உன்னை தொடராமல் நான் இங்கு வந்தேன்
 நான் மறந்தாலும் மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும் பிரியாத உறவல்லவா

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா
வேளையில் உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
நான் உனக்காகவே ஆடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்

உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான் உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்!

வான் நிலா! நிலா ! அல்ல ! உன் வாலிபம் நிலா !

வான் நிலா நிலா அல்ல
உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா
 என் தேவியின் நிலா
 நீயில்லாத நாளெல்லாம் -
நான் தேய்ந்த வெண்ணிலா
 மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?

 (வான் நிலா நிலா அல்ல) தெய்வம் கல்லிலா?
 - ஒரு தோகையின் சொல்லிலா?
 பொன்னிலா?
பொட்டிலா?
புன்னகை மொட்டிலா?
 அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?

 (வான் நிலா நிலா அல்ல)
 வாழ்க்கை வழியிலா?
ஒரு மங்கையின் ஒளியிலா?
 ஊரிலா? நாட்டிலா?
ஆனந்தம் வீட்டிலா?
 அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா?
ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!
 (வான் நிலா நிலா அல்ல)
 ~~~~~~~~~~~~~~

பொன்னென்ன பூவென்ன கண்ணே !

பொன்னென்ன பூவென்ன கண்ணே!
 உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே
பொன்னென்ன பூவென்ன கண்ணே
உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை
புவி காணாமல் போகாது பெண்ணே,

மார்கழியில் மாலையிலே
மலர்ந்ததொரு மல்லிகைபூ,
மார்கழியில் மாலையிலே மலர்ந்ததொரு மல்லிகைபூ,

 யார் வருவார் யார் பறிப்பார் யார் அறிவார் இப்போது,
 பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே
ஒரு கல்யாண பெண்ணாக உன்னை புவி காணாமல் போகாது பெண்ணே, ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும் ஒளியோடு நடை போடும் நீரோடையும், ஊர்கோலம் போகின்ற பூந்தென்றலும் ஒளியோடு நடை போடும் நீரோடையும், சுகமானது சுவையானது உன் வாழ்வும் அது போல உயர்வானது,

பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாண பெண்ணாக உன்னை புவி காணாமல் போகாது பெண்ணே,

செவ்வான மேகங்கள் குழலாகுமா செந்தூரம் விளையாடும் முகமாகுமா, செவ்வான மேகங்கள் குழலாகுமா செந்தூரம் விளையாடும் முகமாகுமா,

நடை போடுமா இசை பாடுமா நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா, பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே ஒரு கல்யாண பெண்ணாக உன்னை புவி காணாமல் போகாது பெண்ணே

சங்கீத ஜாதி முல்லை !

பாடல் : சங்கீத ஜாதி முல்லை
படம் : காதல் ஓவியம்
 இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
பாடகர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா பேசவும் ...

சின்னஞ்சிறு வயதில்
எனக்கோர் சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

மோகனப் புன்னகையில் ஓர்நாள்
மூன்று தமிழ் படித்தேன்
சாகச நாடகத்தில் அவனோர்
தத்துவம் சொல்லி வைத்தான்.
உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர்
ஊமையைப் போலிருந்தேன்
ஊமையைப் போலிருந்தேன்

கள்ளத்தனம் என்னடி
எனக்கோர் காவியம் சொல்லு என்றான்
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

சபாஷ்
பலே

வெள்ளிப் பனியுருகி மடியில்
வீழ்ந்தது போலிருந்தேன்.
பள்ளித்தலம் வரையில் செல்லம்மா
பாடம் பயின்று வந்தேன்

காதல் நெருப்பினிலே எனது
கண்களை விட்டு விட்டேன்
மோதும் விரகத்திலே செல்லம்மா ......

சின்னஞ்சிறு வயதில் எனக்கோர்
சித்திரம் தோணுதடி
இன்னல் விழுந்தது போல் எதையோ
பேசவும் தோணுதடி
செல்லம்மா பேசவும் தோணுதடி

பொன்னான மேனி உல்லாசம் கொண்டாடும் தேனி !