மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 26 ஏப்ரல், 2019

ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே









ஆயிரம் ஆயிரம் ஆண்டின் முன்னே ஆரம்பம் ஆனது மனித இனம் அன்பு பாசம் சொந்தம் எல்லாம் அதுதான் கேட்டது கடவுளிடம் அன்னை தந்தை பிள்ளை என்று அவர்தான் தந்தார் மனிதனிடம் (ஆயிரம்) தேகம் என்பதைக் காத்திருந்தால் தினமும் வயது வளருமடா உள்ளம் அழகாய் வளர்ந்திருந்தால் உலகில் அமைதிக் கிடைக்குமடா தேகம் என்பது கோயிலடா அதில் உள்ளம் என்பது தெய்வமடா அம்மா அப்பா சொல்வதைப் போலே நானும் நீயும் கேட்பதினாலே இன்பம் வளரும் செல்வங்களாலே எல்லாம் உண்டு வாழ்கையிலே (ஆயிரம்) கண்ணனுக்காக காத்திருக்கின்றாள் யசோதை இங்கே முருகனுக்காக காத்திருக்கின்றாள் அன்னையும் இங்கே ஸ்ரீராமனுக்காக காத்திருக்கின்றாள் சீதையும் இங்கே நடக்கும் கால்கள் துடிக்கும் கண்கள் வருகவே இங்கே ஆறாம் வயதில் படிப்பதுதான் அறுபது வரைக்கும் வளருமடா சேரும் இடத்தில் சேர்வதுதான் சீரும் சிறப்பும் வழங்குமடா நல்லவர் நூல்களைப் படித்து விடு வரும் நண்பனை ஒழுங்காய் தேர்ந்து எடு தென்னை மீது தேங்காய் வருது வாழை மீது பழங்கள் வருது அம்மா போலே பிள்ளைகள் நாங்கள் அப்பா போலே வளர்வோம் நாளை (ஆயிரம்) காலங்களாலே கடவுள் தந்தான் கண்ணில் நாயகனை கருணையினாலே மீண்டும் தந்தான் கனிவுள்ள செல்வங்களை ஆல மரமும் போல் நாளும் வளர அருள்வான் வாழ்கையிலே அன்னையைத் தேடி ஆனந்தம் பாடி வாருங்கள் பிள்ளைகளே (ஆயிரம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக