இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்கா..க…. இது யாருக்கா..க……
காதலே போ போ சாதலே வா வா
மரணம் என்னும் தூது வந்தது....
அது மங்கை என்னும் வடிவில் வந்தது....
சொர்க்கமாக நான் நினைத்தது…
இன்று நரகமாக மாறிவிட்டது………….
யாருக்காக…. இது யாருக்காக….
மலரைத்தானே நான் பறித்தது…
கை முள்ளின் மீது ஏன் விழுந்தது…….
உறவை தானே நான் நினைத்தது……
என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது……..
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கமில்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று ஹ ஹா ஹா
கண்கள் தீட்டும் காதல் என்பது…….
அது கண்ணில் நீரை வரவழைப்பது…..
பெண்கள் காட்டும் அன்பு என்பது….
நம்மை பித்தனாக்கி அலையவைப்பது……..
யாருக்காக ................ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
எங்கிருந்து சொந்தம் வந்தது இன்று
எங்கிருந்து நஞ்சு வந்தது
அங்கிருந்து ஆட்டுகின்றவன்
தினம் ஆடுகின்ற நாடகம் இது………
யாருக்காக……. இது யாருக்காக…..
இந்த மாளிகை…. வசந்த மாளிகை….
காதல் ஓவியம் கலைந்த மாளிகை…
யாருக்காக…………. இது யாருக்கா….க……..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக