மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 28 பிப்ரவரி, 2019

ஆராரிரோ !பாடியதாரோ 1 தூங்கிபோனதாரோ! யாரோ யாரோ எனக்காரோ யாரோ !

படம் : தாய்க்கு ஒரு தாலாட்டு
பாடல் : ஆராரிரோ
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்
++++++++++++++++++++++++++++++++++++++




ஆராரிரோ 
பாடியதாரோ
 தூங்கி போனதாரோ
யாரோ யாரோ

 எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா

ஆராரிரோ பாடியதாரோ யாரோ….

நீ முந்தி போனது நியாயம் இல்லையே
நான் முந்தி போகவே யோகம் இல்லையே
கூண்டை விட்டு தாய் கிளி பறந்ததிங்கே
பசித்தவன் கேட்கிறேன் பால் சோறு எங்கே
என் தேவியே நானும் செய்த குற்றம் என்ன கூறு
ஒரு பார்வை பாரு

ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ

பொழுதாகி போனதே இன்னும் தூக்கமா
சொல்லாமல் போவது தாயே நியாயமா
உயிர் தந்த தேவிக்கு உயிரில்லையோ
பாலூட்டி பார்த்தியே பாலூற்றலாமோ
அன்னம் போட்ட என் தாயே உனக்கு அரிசி போட வந்தேன்
எனை நானே நொந்தேன்

ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ
என் தெய்வமே இது பொய் தூக்கமா
நான் தூங்கவே இனி நாளாகுமா

ஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ
யாரோ யாரோ எனக்காரோ யாரோ

=====

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக