மொத்தப் பக்கக்காட்சிகள்

செவ்வாய், 19 மார்ச், 2024

வாராயென் தோழி வாராயோ மணப்பந்தல் காண வாராயோ வாராயென் தோழி வாராயோ!


 

பாடியவர்:எல்.ஆர்.ஈஸ்வரி
🌼Uploaded🌿by🌺Aravinth🌸

குழு)வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பெ)மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ
குழு)வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
🌼Uploaded🌿by🌺Aravinth🌸

பெ)மணக்கோலம் கொண்ட மகளே
புதுமாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழ பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ
குழு)சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ

வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

🌼Uploaded🌿by🌺Aravinth🌸
பெ)தனியாகக் காண வருவார்
இவள் தளிர்ப்பாலே தாவி அணைவாள்
கனி போலே சேர்ந்து மகிழ்வாள்
இரு கண்மூடி மார்பில் துயில்வாள்
எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ
குழு)எழிலான கூந்தல் கலையாதோ
இதமான இன்பம் மலராதோ

வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ

🌼Uploaded🌿by🌺Aravinth🌸
பெ)மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்று வளராதோ

குழு)வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
பெ)மணமேடை தன்னில் மணமே காணும்
திருநாளை காண வாராயோ

குழு)வாராயென் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
Thanks for joining🙏👍💐🌹

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக