மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 12 நவம்பர், 2015

வணக்கம் ! வணக்கம் ! பல முறை சொன்னேன் தமிழ் மகள் கண்ணே!

வணக்கம் பலமுறை சொன்னேன்
சபையினர் முன்னே தமிழ் மகள் கண்ணே
கொண்ட பண்பாடு மறவாத பெண்மை
இன்ப தென்னாட்டின் வழி காக்கும் மென்மை

மேலை நாடெங்கும் விஞ்ஞான கலைகள்
அங்கு விளையாடும் அலங்கார நிலைகள்
அங்கு பெண்ணில்லை பேசும் கண்ணில்லை
என்ன அலங்கோலாமோ என்ன புது மோகமோ

வண்ண திலகங்கள் ஒலி வீசும் முகங்கள்
எங்கள் திருநாட்டு குலமாதர் நலன்கள் ..
.அன்பு தெய்வங்கள் இன்ப செல்வங்கள்
ஆடும் கலையாகுமோ பாடும் தமிழாகுமோ

அன்னை தாய்பாலை பிள்ளைக்கு கொடுத்து ...
அன்பு தாலாட்டு பாட்டொன்று படித்து
காணும் அழகென்ன , தேடும் சுகமென்ன ,
சொல்ல மொழியில்லையே பேச விலையில்லையே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக