மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 18 நவம்பர், 2016

ஆடி அடங்கும் வாழ்க்கையடா...

ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா’. கூர்மையும் தனித்துவமும் பொருந்திய மரபுக் கவிஞராக விளங்கிய உவமைக் கவிஞர் சுரதாவின் வரிகள், எளிமையும் இயல்புமாக வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்துகின்றன. நாகேஷின் உடலுக்கு சீர்காழி கோவிந்தராஜனின் துயரக் குரல் அப்படியே பொருந்திப்போகிறது. இந்தப் பாட்டில் வெளிப்படும் நாகேஷின் முகபாவங்களும் உடல்மொழியும் ஆரவாரமற்ற அண்டர் பிளே அற்புதம்!

இந்தப் படத்தின் நடன இயக்குநர், பிரபுதேவாவின் தந்தை சுந்தரம் மாஸ்டர். ஏ.ஆர். ரகுமானின் தந்தை ஆர்.கே.சேகர் இதில் இணை இசை அமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். இசை வி.குமார். ஒளிப்பதிவு நிமாய் கோஷ். அந்தக் காலத்துக் குறைந்த பட்ஜெட் படமான ‘நீர்க்குமிழி’ ஒரு வெற்றிப் படம். படத்தின் ஹைலைட் என்றால் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடலும் நாகேஷின் நடிப்பும்தான். சென்னை கெயிட்டி தியேட்டரில் அந்த நாட்களில் தொடர்ந்து 80 நாட்கள் ஓடியது.

நட்சத்திர நடிகர்களின் படங்களில் நகைச்சுவை ஊறுகாயாக மட்டும் தொட்டுக்கொள்ளப்பட்ட நாகேஷ் என்னும் நடிகனின் பன்முக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியதில் இயக்குநர் கே.பாலசந்தரின் பங்களிப்பு முக்கியமானது. அவரின் இயக்கத்தில் உருவான முதல் படமான ‘நீர்க்குமிழி’ காலங்களைக் கடந்து, ரசிக நெஞ்சங்களில் உடையாமல் நிற்கும் என்பது உறுதி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக