மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே !

மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே தஞ்சையில் பறந்த புலிக்கொடியை உன் பெண்மையில் கண்டேனே - இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே உன்னை தமிழகம் என்றேனே . மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே . காஞ்சித் தலைவன் கோவில் சிலைதான் கண்மணியே உன் பொன்னுடலோ குடந்தையில் பாயும் காவிரி அலைதான் காதலியே உன் பூங்குழலோ சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான் சேயிழையே உன் செவ்விதழோ? தூத்துக்குடியின் முத்துக் குவியல் திருமகளே உன் புன்னகையோ? திருமகளே உன் புன்னகையோ? . மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே . பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ? பொதிகை மலையில் புறப்படும் தென்றல் இளையவளே உன் நடையழகோ? புதுவை நகரில் புரட்சிக் கவிஞன் குயிலோசை உன் வாய் மொழியோ? கோவையில் விளையும் பருத்தியில் வளரும் நூலிழைதான் உன் இடையழகோ? குமரியில் காணும் கதிரவன் உதயம் குலமகளே உன் வடிவழகோ? இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை தமிழகம் என்றேனே உன்னை தமிழகம் என்றேனே . மதுரையில் பறந்த மீன் கொடியை உன் கண்களில் கண்டேனே - போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக